நவ்யாவின் சுய சரிதை!

Navya Nair
தனது திரையுலக அனுபவங்களை சுயசரிதையாக எழுதியுள்ளார் நடிகை நவ்யா நாயர்.

பிரபல தமிழ், மலையாள நடிகை நவ்யா நாயர். இஷ்டம் என்ற மலையாளப்படம் மூலம் 2001-ல் திரையுலகுக்கு அறிமுகமானார். இவரது முதல் தமிழ் படம் அழகிய தீயே. சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில் இவரால் ஏற்பட்ட தகராறு இயக்குநர் தங்கர் பச்சானை நடிகைகள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தது.

குடும்பமே ஆசிரியர் பணியிலிருப்பதால், நவ்யாவும் நடிப்புடன் படிப்பைத் தொடர்ந்து வந்தார். சமீபத்தில் எம்பிஏ முடித்தார்.

இதுவரை தென்னிந்திய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நவ்யா அந்த அனுபவங்கள் மற்றும் சொந்த வாழ்க்கையை சுயசரிதையாக எழுதியுள்ளார்.

இந்த புத்தக வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது.

இந்தப் புத்தக வெளியீட்டு ஒரு பெரிய பில்டப் கொடுக்க நினைத்து, "விரைவில் ஒரு பரபரப்பான தகவலை வெளியிடவிருக்கிறேன்" என்று நவ்யா அறிவித்திருந்தார். எத்தனை முறை கேட்டும் அதற்குமேல் சொல்ல மறுத்துவிட்டார்.

'சரி மார்க்கெட் டல்லடித்து விட்ட நடிகைதானே... திருமணம் பற்றித்தான் சொல்வார்' என்ற அனுமானத்தில் பத்திரிகையில் பரபரப்பாக செய்தி வெளியிட, உடனே அலறியடித்துக் கொண்டு அவரே எல்லோருக்கும் போன் செய்து, விஷயம் இதுதான் என்று, இந்த சுய சரிதை மேட்டரைக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X