நயன் இப்பவும் ரொம்ப காஸ்ட்லிதான்!

By Staff

Nayanatara
நயன்தாரா இப்போது தன் கால்ஷீட்டை மணிக் கணக்கில் விற்க ஆரம்பித்துவிட்டார் போலிருக்கிறது. எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் ஒரு மணி நேரத்துக்கு அவரது சம்பளம் ரூ.10 முதல் 15 லட்சமாம். கூடவே காஸ்ட்லியான பரிசுப் பொருட்கள் இருந்தாக வேண்டும் என கண்டின் போடுகிறாராம்.

ஐயா படத்தில் சரத்துக்கு ஜோடியாக அறிமுகமான நயனதாரா, அடுத்த படத்திலேயே சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்தார். அப்போதிலிருந்தே அவருக்கு சுக்கிரதசை ஆரம்பித்துவிட, படங்கள் ஓடினாலும் ஓடாவிட்டாலும் சம்பளம் ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டே போய் கோடிகளில் நிற்கிறது.

தமிழில் மட்டுமல்ல, தெலுங்கு படஉலகிலும் அதிக சம்பளம் வாங்கும் முதல் நடிகை என்ற பெயரையும் பெற்றார். தெலுங்கில் டைரக்டர் லிங்குசாமி இயக்கும் பையா படத்திற்காக நயன்தாராவுக்கு ரூ.1.25 கோடி சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல நகைக்கடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நடிகை நயன்தாரா நேற்று திருவனந்தபுரம் வந்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நயன்தாராவுக்கு ரூ.10 லட்சம் மற்றும் தங்க நகைகள் பரிசாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்காக நயன்தாரா திருவனந்தபுரத்தில் 1 மணி நேரம்தான் தங்கினாராம்.

திறந்த கடைக்கு மூடுவிழா நடக்காமலிருந்தால் சரிதான்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X