டான்ஸ் மாஸ்டராகும் நீபா

அந்தக்காலத்தில் மிகவும் பிரபலமான குரூப் டான்ஸர்கள்தான் வாமனும், மாலினியும். சகலகலாவல்லவன் டைட்டில் பாடல், மெளனராகம் படத்தில் வரும் பனி விழும் இரவில் பாடல்களில் ஆடியிருப்பவர்தான் மாலினி.
வாமன், மாலினியின் செல்லப் புத்திரியான நீபாவும் டான்ஸில் கலக்குகிறார். ஆனால் தாய், தந்தையைப் போல டான்ஸ் பக்கம் போகாமல் நடிகையானவர் நீபா.
பெருசு படத்தில் ஹீரோயினாக நடித்த நீபா, சமீபத்தில், விக்னேஷுடன் இணைந்து குடியரசு படத்திலும் நாயகியாக நடித்தார்.
இடையில் டிவி சீரியல்கள் பக்கமும் திரும்பினார். டிவிகளில் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் அம்மா, அப்பா வழியில் டான்ஸ் மாஸ்டராகிறாராம் நீபா.
எட்டாவது படித்துக் கொண்டிருந்தபோதே நான் நடிக்க வந்து விட்டேன். இருந்தாலும் டான்ஸ்தான் எனக்கு உயிர். பரதநாட்டியத்தை முழுமையாக, முறையாக கற்றுக் கொண்டிருக்கிறேன்.
அம்மாவும், அப்பாவும் இணைந்து 1000 படங்களுக்கு மேல் ஆடியுள்ளனர். அப்பாவும் அம்மாவும் சேர்ந்து மாஸ்டர்களாக நடனம் அமைத்த பாடல்கள்தான் தஞ்சாவூரு மண்ணெடுத்து, ஐலசா ஐலசா (நாம் இருவர் நமக்கு இருவர்) பாடல்கள்.
ஹீரோயினாக பெரிய அளவில் சாதிக்க முடியும் என எனக்குத் தோன்றவில்லை. காரணம் நமது படங்களில் ஹீரோயின்களை பெரிய அளவில் பயன்படுத்துவதில்லை. பாடல்களுக்கு ஆடுவதற்காகவே ஹீரோயின்களை பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் சீரியல் கதையே வேறு. அங்கு நடிக்க நல்ல வாய்ப்பு உள்ளது. நடிக்க மட்டுமே வாய்ப்புகள் நிறைய உண்டு.
விரைவில் நான் டான்ஸ் மாஸ்டராகப் போகிறேன். இதற்கு முன்பு ராபர்ட் மற்றும் ஸ்ரீதர் மாஸ்டர்களிடம் உதவியாளராக பணியாற்றினேன். விரைவில் தனி மாஸ்டராக திட்டமிட்டுள்ளேன் என்கிறார் நீபா.
தமிழ் சினிமாவின் அடுத்த கலா மாஸ்டராவாரா நீபா?


Click it and Unblock the Notifications











