பிரியாமணி.. 'பகீர்' காட்சி!

By Staff

Priyamani
மணிரத்தினம் இயக்கி வரும் புதிய படத்தில் (படத்தின் பெயர் குறித்து ஒரே குழப்பம் - அதனால் பெயரை மறந்துடுவோம்) பிரியாமணிக்கு பகீர்மயமான கேரக்டராம்.

தற்போது ஜான்சி பகுதியில் இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. சில முக்கிய காட்சிகளை இங்கு வைத்து படமாக்கிக் கொண்டிருக்கிறார் மணிரத்தினம். இவை பிரியாமணி, பிருத்விராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகள்.

இதில் விக்ரமின் தங்கை வேடத்தில் வருகிறார் பிரியாமணி. அவருடைய ரோல் சிறியதுதான் என்றாலும் படத்திற்கு மிக முக்கியமான ரோலாம்.

ஜான்சியிலிருந்து நமக்குக் கிடைத்த தகவலின்படி, பிரியாமணி தனது அண்ணன் விக்ரமின் விருப்பத்தின்படி தேர்வு செய்யப்பட்ட ஒருவரை மணக்கிறார்.

அந்த மணமகன் பிரியாமணி கழுத்தில் தாலி கட்டுகிறார். அடுத்த விநாடியே, போலீஸ் அதிகாரியாக வரும் பிருத்விராஜ், அந்த மணமணகனை சுட்டு வீழ்த்துகிறார். பிரியாமணி விதவைக் கோலம் பூணுகிறார். இந்தக் காட்சியைத்தான் மணிரத்தினம் சமீபத்தில் படம் பிடித்தாராம்.

இன்னும் ஒரு வாரத்தில் ஜான்சி படப்பிடிப்பு முடிந்து விடுமாம்.

தமிழ், இந்தி, தெலுங்கில் தயாராகி வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தில் அபிஷேக்கும், ஐஸ்வர்யாவும் ஜோடி போட்டுள்ளனர் என்பது தெரியும்தானே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X