twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'மூணாறில்' ஜிலு ஜிலு ரகஸியா!

    By Staff
    |

    Ragasiya
    ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி என குளுகுளு பிரதேசங்கள் ஒன்று விடாமல் சினிமா படத் தலைப்பாக்கி வருகிறார்கள். அந்த வரிசையில் இப்போது மூணாறு.

    தம்பிதுரை எனும் புதிய இயக்குநர் இயக்கும் இந்தப் படத்தின் நாயகியாக இல்லாவிட்டாலும், அதற்கு இணையாகப் பேசப்படுபவர் 'சிரிச்சி சிரிச்சி வந்த சீனாதானா...' ரகஸியா. அதுவும் இரண்டு குத்தாட்டப் பாடல்களில் செமத்தியாக சூடேற்றும் விதத்தில் கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறாராம் ரகஸியா.

    ரஞ்சித் - ரித்திமா எனும் இரண்டு புதுமுக்கள் இப்படத்தில் அறிமுகமாகிறார்கள்.

    நீண்ட நாளைக்குப் பிறகு தனியாகக் காமெடியில் கலக்க வருகிறார் செந்தில். படத்தின் தலைப்பை மூணாறு என வைத்துவிட்டு, சென்னையில் படமாக்க முடியுமா... அதனால் மூணாறு, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் ஜிலு ஜிலு எனப் படமாக்கியிருக்கிறார்களாம்.

    குறிப்பாக மூணாற்றி பிரமாதமான லொக்கேஷனில் ரகஸியாவை வைத்து எடுக்கப்பட்டுள்ள ஒரு பாடல், ரசிகர்களைத் திரும்பத் திரும்ப பார்க்க வைக்கும் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

    ரெக்கார்ட் டான்ஸ் ரேஞ்சுக்குப் போய்ட்டாங்களோ?

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X