பெரிய நடிகர்களுடன் மட்டுமே கிளாமராக நடிப்பேன்-ஷீலா

இளவட்டம் படம் மூலம் நாயகியாக உருவெடுத்த இந்த முன்னாள் குழந்தை நட்சத்திரம், இப்போது கிளாமரில் புதுப் புதுப் புரட்சி படைத்துக் கொண்டிருக்கிறார்.
இளவட்டம் படத்தில் ஏக கிளாமராக நடித்தும் கூட தமிழில் சரிவர வாய்ப்புகள் இல்லை ஷீலாவுக்கு. ஆனால் தெலுங்கில் அபரிமிதமான ஆதரவு இருப்பதால் அங்கேயே முகாமிட்டுள்ளார் ஷீலா.
கிளாமராக நடிக்க தயங்குவதில்லை என்றாலும் கூட சின்ன பட்ஜெட் படங்கள், புதுமுக நடிகர்களுடன் நடிக்க வரும் வாய்ப்புகளை நிராகரித்து விடுகிறாராம் ஷீலா.
அது ஏன் அப்படி என்று கேட்டால், புதுமுக நடிகர்களுடன், சின்ன பட்ஜெட் படத்தில் நாம் எப்படி நடித்தாலும் அது ரசிகர்களைப் போய்ச் சேராது. அது வேஸ்ட் வேலை.
அதேசமயம், பெரிய நடிகர்களின் படங்களில், பெரிய பேனர்களில் நடித்தால் நிச்சயம் நாமும் கவனிக்கப்படுவோம்.
அதுபோன்ற படங்களில் கிளாமர் காட்டி நடிக்க நான் தயங்குவதில்லை. அதில் தவறும் இல்லை என்று கூறி நிறுத்தினார்.
தமிழில் இதுவரை பெரிய அளவில் கிளாமர் காட்டி நடிக்கும் அளவுக்கு வாய்ப்பு வரவில்லையாம் ஷீலாவுக்கு. வந்தால் தவறாமல் நடிப்பாராம்.
தற்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் இணைந்து நடிக்கிறார் ஷீலா. இப்படத்தில் இன்னொரு ஹீரோயின் நயனதாரா. இருவரும் படத்தில் கடும் கிளாமர் போட்டியில் குதித்துள்ளனராம்.
இந்தப் படத்தை சீக்கிரமே தமிழுக்கும் டப் பண்ணி கொண்டு வாங்கப்பா..


Click it and Unblock the Notifications











