தனுஷ் படம்- ஸ்ரேயா புலம்பல் !

By Staff

Shreya
தனுஷ் படத்தால் எனது ஒரு மாத கால்ஷீட் வீணாகிவிட்டது. நடிக்க மாட்டேன் என்று வாங்கிய அட்வான்ஸைக் கொடுத்தாலும் வாங்க மறுக்கிறார்கள் என புகார் கூறியுள்ளார் ஸ்ரேயா.

தெலுங்கில் வெளியான ஆர்யா படத்தின் ரீமேக்கில் தனுஷ் ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார். ஜவஹர் மித்ரன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்காக அக்டோபர் 10-ம் தேதியிலிருந்து கால்ஷீட் கொடுத்திருந்தாராம் ஸ்ரேயா. ஆனால் அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல், படப்பிடிப்பைத் தொடங்காமல் உள்ளார்களாம் தனுஷ் மற்றும் அவரது குழுவினர்.

இதுகுறித்து ஸ்ரேயா கூறியதாவது:

தனுஷ் படத்துக்கு அக்டோபர் 10-ம் தேதி முதல் நவம்பர் 3-ம் தேதி வரை கால்ஷீட் கொடுத்திருந்தேன். இன்னும் ஷூட்டிங் தொடங்கவில்லை. எப்போது தொடங்குவார்கள் என்ற ஐடியாவும் இல்லை.

எனது ஒரு மாதத்தை வீணாக்கி விட்டனர். அந்த நேரத்தில் வேறு படங்களிலாவது நடித்திருப்பேன். படப்பிடிப்புக்கு அழைப்பார்கள் என காத்திருந்ததுதான் மிச்சம். இதுபற்றி புகார் சொன்னால் என் மீதே பழி சுமத்துகிறார்கள். வாங்கிய அட்வான்ஸைக் கொடுத்துவிட்டு படத்திலிருந்து விலகிக் கொள்ள முயன்றாலும் விடமாட்டேன் என்கிறார்கள்.

இது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

தமிழில் அடுத்து வரும் என் படம் தாணு சாரின் கந்தசாமி. இந்தியில் ஏக், வாட்ஸ் குக்கிங் படங்களின் ஷூட்டிங்கை முடித்துவிட்டேன்.

ஆங்கிலத்தில் தி அதர் எண்ட் ஆஃப் லைன் எனும் படம் இன்னும் சில தினங்களில் வெளிநாடுகளில் திரைக்கு வருகிறது அதன் பின்னர்தான் இந்தியாவில் திரைக்கு வரும்.

கமல்ஹாசனின் மர்மயோகியில் நடிக்கிறேன். இதன் ஷூட்டிங் இன்னும் சில தினங்களில் ஆரம்பிக்கவிருப்பதாகக் கூறுகியிருக்கிறார்கள். ஜக்குபாயில் என் வேலை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது, என்றார் ஸ்ரேயா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X