'அம்மன்' ஆன சிம்ரன்!!

பிரமிட் சாய்மீரா தயாரிக்கும் சிம்ரன் திரையில் இப்போது ஒளிபரப்பாகும் 5வது கதையான நவ வெள்ளியில் சிம்ரனுக்கு அம்மன் வேடம்.
உலகைக் காக்கும் ஆதிபராசக்தியின் வடிவமாக இத்தொடரில் தோன்றி, தீயவர்களை அழிக்கிறார் சிம்ரன்.
தெய்வ ரகசியங்களைத் தெரிந்து கொள்ளும் மனிதன் ஒருவன் தானே உலகை ஆளும் சக்தியாக மாற முயல்கிறான். அவனை அன்னை ஆதிபராசக்தி எப்படி அடக்கியாளுகிறாள் என்பதுதான் கதையின் கரு.
பெரிய திரையில் கூட இதுவரை அம்மன் வேடம் ஏற்றிராத சிம்ரன், இத்தொடருக்காக முதல் முறை அம்மன் வேடம் போடுகிறார்.
என்னுடைய நடிப்பு வாழ்க்கையில் மிக முக்கியமான பாத்திரம் இந்த நவ வெள்ளியில் நான் போட்டிருக்கும் அம்மன் வேடம்தான் என்கிறார் சிம்ரன்.
அரவிந்தராஜ் இயக்கும் இத் தொடரின் கிரியேட்டிவ் ஹெட் சுபா வெங்கட். கதை, திரைக்கதை, வசனம்: செல்வபாண்டி.
ஜெயா டிவியில் ஜூன் 30-ம் தேதி முதல் இத்தொடர் ஒளிபரப்பாகிறது.


Click it and Unblock the Notifications











