தட்டிப் பறித்த தமன்னா

கேடி படம் மூலம் தமிழுக்கு வந்தவர் தமன்னா. ஆரம்பத்தில் அவரது மார்க்கெட் சறுக்கலாகவே இருந்தது. ஆனால் தற்போது முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட ஆரம்பித்திருக்கிறார். கல்லூரி படம் அவரது நடிப்புக்கு நல்ல முத்திரையாக அமைந்தது. இதையடுத்து அவரைத் தேடி கதையம்சம் கொண்ட கேரக்டர்கள் தேடி வர ஆரம்பித்துள்ளன.
தமிழில் தற்போது தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ள ஆரம்பித்திருக்கும் அவர் சைட் பை சைடாக தெலுங்கிலும் மார்க்கெட்டை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
தெலுங்கில் தற்போது முன்னணியில் இருப்பவர் இலியானா. அவருக்குப் போட்டியாக இதுவரை திரிஷாவும், நயனதாராவும்தான் இருந்தார்கள். இப்போது இலியானாவுக்கு நேரடிப் போட்டியாக மாறியுள்ளார் தமன்னா.
சமீபத்தில் இலியானா தட்டிக் கழித்த இரு படங்களைக் கைப்பற்றியுள்ளாராம் தமன்னா. தற்போது அந்தப் படங்களில் இலியானாவுக்கு சொன்னதை விட வலுவான கதையாக மாற்றியுள்ளனராம் இயக்குநர்கள். இதனால் இலியானா, பொறியில் சிக்கிய எலியாக தவித்து வருகிறாராம்.
இந்த வாய்ப்புகளைப் பெறுவதற்காக சம்பளத்தைக் குறைத்து, கவர்ச்சியைக் கூட்டியுள்ளாராம் தமன்னா. இந்தப் படங்கள் வரட்டும், அதன் பின்னர் நான் புலியாவேன், இலியானா எலியாவார் என்றும் கூறி வருகிறாராம் தமன்னா.


Click it and Unblock the Notifications











