அபியும் நானும் மீண்டும் ஷூட்டிங் - 3 நாள் நடிக்கிரார் திரிஷா

பிரகாஷ் ராஜ் தந்தையாகவும், திரிஷா மகளாகவும் நடித்துள்ள படம் அபியும் நானும். ராதாமோகன் இயக்கியுள்ளார். பிரகாஷ் ராஜ் தயாரித்துள்ளார்.
கடந்த மாதமே இப்படம் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட தீர்மானித்தார் பிரகாஷ் ராஜ். இதையடுத்து அந்த வேலையில் இறங்கினார். தமிழில் பிருத்விராஜ் செய்த கேரக்டரில் தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபுவை நடிக்க வைக்க முடிவு செய்தார்.
இதையடுத்து திரிஷா, ஜெகபதிபாபு, பிரகாஷ் ராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்காக மீண்டும் நடித்துத் தர வேண்டும் என திரிஷாவிடம் கோரிக்கை விடுத்தார் பிரகாஷ் ராஜ். அதை திரிஷாவும் ஏற்றார்.
இதைத் தொடர்ந்து 3 நாட்கள் கால்ஷீட் கொடுத்தார். இதையடுத்து இந்தக் காட்சிகளை ஊட்டியில் வைத்து ஷூட் செய்யவுள்ளார் பிரகாஷ் ராஜ்.
Comments
abhiyum naanum அபியும் நானும் சினிமா தமிழ் திரிஷா தெலுங்கு பிரகாஷ் ராஜ் cinema prakash raj telugu trisha


Click it and Unblock the Notifications