'திரிஷா': சிம்பு-தனுஷ் அடுத்த போட்டி!

சிம்பு நடிக்க கெளதம் மேனன் இயக்கும் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் நாயகியாக திரிஷா நடிக்கிறார். சிம்பு, திரிஷா இணைந்திருக்கும் புகைப்படங்கள் தினசரி வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் தனுஷ் அடுத்து நடிக்கப் போகும் படத்தில் அவருக்கு ஜோடி சேர்ந்துள்ளார் திரிஷா.
படத்தின் பெயர் ஆடுகளம். முற்றிலும் மதுரையைக் களமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்படுகிறது. படத்தை இயக்குபவர் வெற்றி மாறன். பொல்லாதவன் படத்தைக் கொடுத்த வெற்றி மாறன், அப்படத்துக்குப் பின்னர் இயக்கும் படம்தான் இந்த ஆடுகளம்.
மதுரை குடிசைப் பகுதியைச் சேர்ந்த இளைஞராக வருகிறாராம் தனுஷ். இதற்கு முன்பு தனுஷ் நடித்த படங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமான நடிப்பையும், ஸ்டைலையும் இதில் வெளிப்படுத்தவுள்ளாராம்.
இப்படம் குறித்து தனுஷ் கூறுகையில், வழக்கமான எனது நடிப்பு ஸ்டைல் இதில் இருக்காது. அப்பாவிடும் திட்டுவாங்குவது, அடிதடியில் இறங்குவது, கல்லூரி மாணவன் என பல ரோல்களில் எனைப் பார்த்த ரசிகர்களுக்கு இந்தப் படம் வித்தியாசமாக இருக்கும்.
இது ஒரு ரவுடியின் கதை அல்லது பொறுக்கியின் கதை என்று பொத்தாம் பொதுவாக சொல்லி விட முடியாது. வி்த்தியாசமான கேரக்டர்.
என்னுடன் முதல் முறையாக திரிஷா இணைகிறார். தீபாவளிக்குப் படம் ரிலீஸாகும் என்றார்.
ஒரே நேரத்தில் திரிஷா, சிம்பு, தனுஷுடன் ஜோடி சேருவதால் புதிய பரபரப்பும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
சபாஷ், சரியான போட்டி.


Click it and Unblock the Notifications











