ரஜினி படத்தில் விஜயலட்சுமி!

By Staff

Vijalakshmi with Snigdha
சுல்தான் தி வாரியரில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அகத்தியன் மகளும், அஞ்சாதே பட நாயகியுமான விஜயலட்சுமி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சுல்தான் படம் முழுக்க முழுக்க அனிமேஷனில் உருவாகும் பிரமாண்ட படைப்பாகும். ரூ.70 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் சவுந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோவும், அனில் அம்பானியின் ஆட்லேப்ஸூம் இணைந்து உருவாக்கும் இந்தப் படத்தில் ரஜினி அனிமேஷன் கேரக்டரில் வருகிறார். முதலில் ரஜினியை வைத்து நிஜக் காட்சிகளை எடுத்துவிட்டு பிஎன்னர் அனிமேஷனுக்கு மாற்றும் டெக்னிக்கில் உருவாகும் படம் இது.

இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக இலியானா நடிக்கிறார். சில தினங்களுக்கு முன்புதான் அவர் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்நிலையில், இந்தப் படத்தில் விஜயலட்சுமியும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஐதராபாத்தில் உள்ள அன்னப்பூர்ணா ஸ்டுடியோவில் நடந்த படப்பிடிப்பிலும் விஜயலட்சுமி கலந்து கொண்டு சில காட்சிகளில் நடித்துக் கொடுத்தார்.

இதுகுறித்து சவுந்தர்யாவிடம் கேட்டபோது, இந்தப் படத்தில் விஜயலட்சுமியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஒரு முழுமையான ரஜினி படமாக உருவாக்கி வருகிறோம், என்றார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்துவிடும் திட்டத்திலுள்ள சவுந்தர்யா, 2009 மே மாதம் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார். வார்னர் பிரதர்சுடன் இணைந்து அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளில் இப்படத்தைத் திரையிட உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X