நயன் ஒத்துழைப்பு-விஷால் புல்லரிப்பு!

சத்யம் படத்தின் கதையை விட நயனதாரா காட்டியுள்ள அதீதகவர்ச்சி குறித்துதான் கோலிவுட்டில் குசுகுசுவென பேசிக் கொண்டிருக்கிறார்கள். அன்பிரசிடென்ட் என்று கூறும் அளவுக்கு அதீத கவர்ச்சியில் அசத்தியிருக்கிறாராம் நயனதாரா. எல்லாம் அவர் விருப்பப்பட்டே கவர்ச்சி காட்டினாராம். அவரை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்று இயக்குநர் ராஜசேகர் வேறு கூறி சூட்டைக் கூட்டியிருக்கிறார்.
சத்யம் படம் குறித்து செய்தியாளர்களிடம் விஷால் கூறுகையில், சத்யம் படத்தில் நயனதாரா அனைவருடனும் நன்கு ஒத்துழைத்தார். எங்களுடைய ஜோடிப் பொருத்தம் அபாரமாக இருந்ததாக செட்டில் கூறினர். ரசிகர்களும் கூறுவார்கள் என நம்புகிறேன்.
ஒரு பாடல் காட்சியில்,நயனதாராவை அதிக கவர்ச்சி காட்டி நடிக்குமாறு நான் வற்புறுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.உண்மை அதுவல்ல. நானோ அல்லது இயக்குநரோ நயனதாராவை கவர்ச்சி காட்டுமாறு கட்டாயப்படுத்தவில்லை. வற்புறுத்தவில்லை.
படத்தின் கதை குறித்து ஆரம்பத்திலேயே அவருக்குத் தெரியும். கவர்ச்சி காட்ட வேண்டிய இடங்கள் குறித்தும் அவருக்கு முதலிலேயே தெரியும். பாடல் காட்சி குறித்தும் அவருக்கு முன்பே கூறப்பட்டு விட்டது. அவருடைய காஸ்ட்யூம் உள்பட அனைத்தையும் முன்பே அவரிடம் தெரிவித்து விட்டோம்.
எல்லாவற்றையும் நாங்கள் முன்பே அவரிடம் கூறியதால் அவரும் எந்த வித பிரச்சினையும் செய்யவில்லை. ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. விரும்பியே நடித்தார்.
நயனதாராவுடன் காதலா என்ற கேள்விக்கு விஷால் பதிலளிக்கையில், காதல் புனிதமானது. இந்தக் கேள்வியை என்னிடம் கேட்பது தேவையற்றது என்று நினைக்கிறேன். தேவைப்படும்போது அதுகுறித்து நானே சொல்வேன் என்றார் விஷால்.
உடனிருந்த இயக்குநர் ராஜசேகர் கூறுகையில், படத்தின் பட்ஜெட் ரூ.23 கோடியைத் தொட்டு விட்டது. தமிழ், தெலுங்கில் 600 பிரிண்டுகளுடன் படம் ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்குவருகிறது. ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் ரூ. 1.75 கோடி செலவிட்டோம் என்றார்.
இப்படம் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு 25வது படமாகும். சில்வர் ஜூப்ளி படம் என்பதால் பாடல்களில் மிரட்டியுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











