'அம்மு' பாரதிக்கு கல்யாணம்!

முதல் படத்திலேயே கசமுசா வேடமேற்று நடிப்பில் புதுப் பரிமாணம் காட்டிய பாரதி, தன் உறவுக்கார இளைஞர் ஒருவரை விரைவில் மணக்கவிருக்கிறார்.
தற்போது 'சற்றுமுன் கிடைத்த தகவல்' படத்தில் மட்டுமே நடித்து வரும் பாரதி, தன்னைத் தேடி வந்த பல வாய்ப்புகளை நிராகரித்து விட்டார்.
விஜயகாந்தின் எங்கள் ஆசான், ஜிஆரின் எங்க ராசி நல்ல ராசி போன்ற படங்களில் கதாநாயகி வாய்ப்பு முதலில் பாரதிக்குத்தான் அளிக்கப்பட்டது. ஆனால் திருமணத்தைக் காரணம் காட்டிய பாரதி அவற்றை நாசூக்காக ஒதுக்கிவிட்டார்.
ஒரு பெண் காலாகாலத்தில் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட வேண்டும். ஆசைக்கு நான்கு படங்கள் நடித்தேன். போதும் இந்த நடிப்பு வாழ்க்கை. இனி குடும்ப வாழ்க்கைதான், என தெளிவாகப் பேசுகிறார் பாரதி.
வாழ்த்துக்கள்!
Comments


Click it and Unblock the Notifications