பருத்தி வீரன் மாதிரி படம் அமையலையே! - ப்ரியாமணி ஏக்கம்
"பாவாடை - தாவணியே இனி எனக்கு வேண்டாம். பருத்தி வீரன் முத்தழகி கெட்டப்பிலிருந்து விடுபட விரும்புகிறேன்," என்று பேட்டியாகக் கொடுத்துக் கொண்டிருந்த ப்ரியாமணி இப்போது இருக்குமிடமே தெரியவில்லை!
சினிமாவில் நானும் இருக்கிறேன் என்பதை தெரிவிக்க தெரிந்த நிருபர்களை அழைத்து பேட்டி மேல் பேட்டியாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் கேரளாவில் ஒரு பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அங்கு வந்திருந்த நிருபர்கள் சிலரிடம் தனக்கு நல்ல வாய்ப்பு இல்லையே என்ற புலம்பலைத் தொடர்ந்தார்.
அவர் கூறுகையில், "பருத்தி வீரன் படத்தில் முத்தழகு கதாபாத்திரம்தான் எனக்கு தேசிய விருது பெற்று தந்தது. அதேநேரம் முத்தழகு போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதை விட விதவிதமான கேரக்டர்களில் நடிக்க விரும்பினேன். ஆனால் அவ்வாறு மாறுபட்ட வேடங்களே எனக்கு கிடைப்பதில்லை. பருத்தி வீரன் மாதிரி படமும் அமையவில்லை. இதுவருத்தத்தை அளிக்கிறது.
கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் வெவ்வேறு விதங்களில் நடித்து வருகிறேன்.
தமிழ் சினிமாவில் அதிகமாக நடிக்க விரும்புகிறேன். எனக்கு அளிக்கப்படும் கதாபாத்திரங்களின் தன்மை மாறுபட வேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால் பருத்தி வீரன் மாதிரி கனமான படத்தில் நடிக்க இப்போதும் தயார்", என்றார்.


Click it and Unblock the Notifications











