இப்போ நல்லா கத்துக்கிட்டேன்-ரம்யா நம்பீசன்

By Sudha

Remya Nambeeshan
முன்பு தமிழில் பேச சிரமப்படுவேன். இப்போது நன்றாக கற்றுத் தேறி விட்டேன் என்கிறார் மலையாளத்து ரம்யா நம்பீசன்.

மலையாளத்திலிருந்து வந்திறங்கிய நாயகியர்களில் ரம்யாவும் ஒருவர். ராமன் தேடிய சீதை படத்தில் நடித்து அறிமுகமான இவர் இப்போது ஷக்தியுடன் சேர்ந்து ஆட்டக்காரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

எப்படி இருக்கிறது தமிழ் சினிமா உலக அனுபவம் என்று அவரிடம் கேட்டால்,

சிறப்பாக போய்க் கொண்டிருக்கிறது. இங்கு எல்லோருமே மலையாள நடிகைகளாக உள்ளனர். அந்த வரிசையில் நானும் இணைந்துள்ளேன்.

ஆட்டக்காரன் படத்தில் தமிழில் பேசி நடிக்க சிரமப்பட்டேன். ஆனால் போகப் போக சரியாக இப்போது நன்றாகப் பேசக் கற்றுக் கொண்டு விட்டேன் என்றார் ரம்யா கேரளத்து புன்னகையுடன்.

முன்பு சதை பிடித்தாற் போல இருந்தீர்கள், இப்போது மெலிந்து காணப்படுகிறீர்களே என்று கேட்டால், அதை ஏன் கேட்கிறீர்கள். மலையாளத்தில் நாயகிகள் குண்டாக இருந்தால்தான் ரசிகர்கள் விரும்பிப் பார்ப்பார்கள். ஆனால் தமிழிலோ ஒல்லியாக இருக்கும் நாயகிகளுக்குத்தான் மவுசாம். எனவேதான் நானும் உடம்பை டிரிம் ஆக்கி வருகிறேன் என்றார் செல்லமான அலுப்புடன்.

அது ஸரி...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X