'ஏமாந்து' போன திரிஷாவின் உதடு!

இந்தியில் பெரும் வெற்றி பெற்ற லவ் ஆஜ் கல் படத்தில் தெலுங்கில் உருவாகிறது. இந்தியில், தீபிகா நடித்த படம் இது. அதில் படு சூடான முத்தக் காட்சி உண்டு. இந்தியி்ல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கிஸ்ஸிங் இது. இந்தக் காட்சியை அப்படியே தெலுங்கிலும் வைத்தார் இயக்குநர் ஜெயந்த்.
இதுகுறித்து திரிஷாவுடன் அவர் பேசினார். அவரும், எனக்கு பிரச்சினை இல்லை என்று கூறி உதடுகளுடன் தயாராகி விட்டார். ஆனால் ஹீரோ பவன் கல்யாண், அதெல்லாம் வேண்டாமே என்று கூறி விட்டார்.
இதனால் குழப்பமடைந்த ஜெயந்த், இல்லை, இல்லை நான் திரிஷாவிடம் பேசி விட்டேன். அவர் ரெடியாகத்தான் இருக்கிறார் என்று கூறி பவன் கல்யாணை சமாதானப்படுத்திப் பார்த்தார். ஆனாலும் பவன் பிடிவாதமாக,இல்லை இல்லை வேண்டாமே என்று கூறி விட்டாராம்.
ஹீரோயின் ரெடியாக இருந்தும், ஹீரோ தயாராக இல்லாததால் அந்தக் காட்சியையே டிராப் செய்துள்ளார் இயக்குநர்.
முத்தக் காட்சியை விட முத்தம் நிராகரிக்கப்பட்ட இந்த செய்திதான் இப்போது டோலிவுட்டில் படு சூடாக வலம் வருகிறதாம்.


Click it and Unblock the Notifications











