ஏன் வரல 'மைனா'?
மைனா படத்தின் நாயகி அனகா, அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை.
காரணம், அந்தப் படத்தின் இயக்குநர் பிரபு சாலமன் வரவேண்டாம் என்று கூறிவிட்டதாக தகவல் பரவியுள்ளது. விசாரித்தால், இதற்குக் காரணம் சிந்து சமவெளி படம்தான் என்றார்கள்.
சிந்து சமவெளிக்கும் மைனாவுக்கும் என்ன தொடர்பு?
சிந்து சமவெளியில் மாமனாருடன் உறவு வைத்துக் கொள்ளும் மருமகளாக நடித்தவர்தான் இந்த அனகா.
இந்த பாத்திரத்தில் அவர் நடித்ததால், அவரைப் பற்றி மோசமான இமேஜ் உருவாகிவிட்டதென்றும், இது மைனாவை பாதிக்கும் என்றும் கூறி, படம் தொடர்பான புரமோஷனல் எதற்கும் வரக்கூடாது என்று தடை போட்டு விட்டாராம் பிரபு சாலமன்.
அனகாவிடம் இது பற்றிக் கேட்டால், "அதெல்லாம் இல்லீங்க. எனக்கு எக்ஸாம் இருந்தது அதான்.." என்று இழுத்தார்.
ரைட்.... கோலிவுட் தேர்வில் நீங்க டபுள் புரமோஷன் ஆகிடுவீங்க!


Click it and Unblock the Notifications











