'டபுளுக்கு' அனுஜா ரெடி!

By Staff

Anuja Iyer
எனக்கு நடிக்க வாய்ப்பு இருக்குமானால், இரண்டு நாயகிகள் நடிக்கும் படத்திலும் நடிக்க நான் தயார்தான் என்கிறார் அனுஜா அய்யர்.

பளிச் முகம், துறு துறு குணம். உன்னைப் போல் ஒருவன் அனுஜாவை தூக்கி நிறுத்தி விட்டது. இப்போது கோலிவுட்டில் அனுஜாவுக்கும் ஏக கிராக்கி.

நாயகி என்ற அந்தஸ்தில் உன்னைப் போல் ஒருவன் படத்தில் நடிக்காவிட்டாலும் கூட கிடைத்த பாத்திரத்தில் கிளப்பியிருப்பதால் அனுஜாவுக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.

இதையடுத்து அவரைத் தேடி நிறையப் படங்கள் வருகிறதாம். ஆனால் நடிப்புக்கு வாய்ப்புள்ள வேடங்களாக பார்த்து செலக்ட் செய்து நடிக்கவுள்ளாராம் அனுஜா.

எனக்கு தனி நாயகியாகத்தான் நடிக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை. எனக்கு நடிக்க நல்ல வாய்ப்பு இருக்க வேண்டும். அதேசமயம், ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்றும் கிடையாது. நடிக்க வாய்ப்பு இருந்தால் டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட்டில் கூட நடிக்க நான் தயார்தான் என்கிறார் படு பிராக்டிகலாக.

தற்போது ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோவாக அறிமுகமாகும் காதல் டூ கல்யாணம் படத்தில் 2வது நாயகியாக நடிக்கிறாராம் அனுஜா. தி்வ்யா (குத்து ரம்யா) முதல் ஹீரோயினாக நடிக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X