எப்படியெல்லாம் கிளப்புறாங்கப்பா வதந்தியை!

சாயாசிங் இப்போது எந்த மொழிப் படத்திலும் கமிட் ஆகவில்லை என்பது கோலி, டோலி, சேன்டல், மல்லு என அனைத்து 'வுட்'களும் அறிந்த ஒன்றுதான்.
ஆனால் இதுவே சாயா சிங்கைப் பற்றி வதந்தி கிளப்புவோருக்கு நல்ல அவல் கிடைத்தது போலாகி விட்டது. சாயாசிங் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார், மாப்பிள்ளை ரெடி, அவர் ஒரு ஹார்ட்வேர் நிறுவன அதிபர் என்றெல்லாம் கிளப்பி விட்டு விட்டனர்.
இதனால் அப்செட் ஆகியுள்ளார் சாயா சிங். இதுகுறித்து அவர் பொறுமுகையில், நானே நல்ல பட வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். எந்தப் படத்திலும் இப்போது நான் நடிக்கவில்லை. அதை மறுக்கவில்லை.
என்னைத் தேடி படங்கள் வராமல் இல்லை. ஆனால் நல்ல கேரக்டராக வர வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறேன். இதை வைத்து உடனே கல்யாணம் என்று வதந்தி பரப்பி விட்டார்கள். படம் இல்லாமல் வீட்டில் இருந்தால் உடனே கல்யாணம் செய்து கொண்டுதான் ஆக வேண்டுமா என்கிறார் கோபமாக.
அதானே, ஏய்யா, ஏன்..?


Click it and Unblock the Notifications











