மறுபடியும் சிந்து துலானி

By Staff

Sindhu Tolani
அட்டகாச அழகு அபரிதமிதமாக இருந்தும் சரியாக கிளிக் ஆகாமல் போன சிந்து துலானிக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நாயகியாக நடிக்கவுள்ளார் சிந்து துலானி.

தனுஷ் அதிரடி நாயனாக நடித்த, ரமணா இயக்கத்தில் உருவான சுள்ளான் படம் மூலம் தமிழுக்கு வந்தவர் சிந்து துலானி. நிறையக் கவர்ச்சி காட்டியும் சிந்து தேறவில்லை. படமும் போணியாகவில்லை. இதனால் ராசியில்லாத நடிகையாக மாறினார் சிந்து.

இந்த நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் தனி நாயகியாக நடிக்கவுள்ளார் சிந்து துலானி. சத்தம் போடாதே படத்தில் வில்லத்தனம் காட்டி கலக்கிய நிதின் சத்யா நாயகனாக நடிக்கவுள்ளார்.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் கேட்ச் மி இஃப் யூ கேன் என்ற ஹிட் படத்தின் தழுவலாம் இப்படத்தின் கதை.

முதலில் இப்படத்தின் நாயகியாக மல்லிகா கபூரை போடத் திட்டமிட்டார் சந்திரசேகரன். ஆனால் கடைசி நேரத்தில் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு சிந்து துலானியை நாயகியாக்கி விட்டார்.

சிந்துவுக்கு சந்திரசேகரனின் படமாவது பிரேக் கொடுக்கட்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X