கரீஷ்மா கபூர் கர்ப்பம்!

ஏற்கனவே கரீஷ்மா கபூருக்கு சமைரா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் தற்போது மீண்டும் கரீஷ்மா கர்ப்பம் தரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதை கரீஷ்மாவின் தங்கை கரீனா கபூரே மீடியாக்களுக்குத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், எனது அக்காவுக்கு 2வது குழந்தை பிறக்கப் போகும் சந்தோஷத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என்றார்.
சமீபத்தில் டெல்லி வந்திருந்த கரீஷ்மா கபூரிடம், 2வது முறையாக கர்ப்பமாக உள்ளீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது புன்னகையுடன், இது பெர்சனல் விஷயம். நாங்கள் அனைவரும் மிக மிக சந்தோஷமாக இருக்கிறோம் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் என்று மறைமுகமாக தான் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்தார் கரீஷ்மா.
இதற்கிடையே, மீண்டும் சினிமாவுக்குத் திரும்பி வருவதில் ஆர்வமாக இருக்கிறாராம் கரீஷ்மா. இதற்காக ஜிம்முக்கெல்லாம் போய்க் கொண்டிருந்தார். ஆனால் தற்போது கர்ப்பமாக இருப்பதால் அதை நிறுத்தி வைத்துள்ளார். இருப்பினும் குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் உடலைத் தேற்றி மறுபடியும் திரைக்கு வர அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











