மீண்டும் ஜெயஸ்ரீ

By Staff

Jayashree
தென்றலே என்னைத் தொடு நாயகி ஜெயஸ்ரீ பெரிய இடைவெளிக்குப் பிறகு மீ்ண்டும் பெரிய திரைக்கு திரும்பி வருகிறார்.

ராதா, ரேவதி, நதியா காலத்து நாயகி ஜெயஸ்ரீ. தென்றலே என்னைத் தொடு மூலம் நாயகியானவர். முதல் படத்திலேயே அழகிய நடிகையாக அறியப்பட்டு முத்திரை பதித்த ஜெயஸ்ரீ பின்னர் பல்வேறு படங்களில் நடித்தார்.

பின்னர் 2வது நாயகியாகவும் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டியவர்.

அவரது நடிப்புக்கு சான்றாக அமைந்தவை திருமதி ஒரு வெகுமதி, தாலி தானம், பிஸ்தா போன்றவை.

தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார் ஜெயஸ்ரீ.

1988ம் ஆண்டில் திருமணமான பின்னர் வெளிநாடு போய் செட்டிலானார் ஜெயஸ்ரீ. அதன் பின்னர் அவர் நடிக்கவில்லை. பல மொழிப் படங்களிலும் நடிக்கும் வாய்ப்புகள் நிறைய வந்தபோதிலும், இரு மகன்களுக்குத் தாயாகியிருந்த ஜெயஸ்ரீ, நல்ல கேரக்டர் கிடைக்காமல் நடிப்பதில்லை என்ற முடிவில் இருந்து வ்நதார்.

இந்த நிலையில், சன் டிவியில் வெளியான திருவாளர் திருமதி நிகழ்ச்சியை ஜெயஸ்ரீ தொகுத்து வழங்கிய பாங்கு அனைவரையும் கவர்ந்தது. இதன் மூலம் கோலிவுட் கண்களில் மீண்டும் பட்டார் ஜெயஸ்ரீ.

மறுபடியும் சினிமா வாய்ப்புகள் வர, இப்போது நடிக்கத் தயாராகி விட்டார் ஜெயஸ்ரீ. மிர்ச்சி மூவிஸ் தயாரித்து வழங்கும் காதல் 2 கல்யாணம் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் ஜெயஸ்ரீ.

தனக்குப் பொருத்தமான கேரக்டர் என்பதால் உடனே நடிக்க ஒப்புக் கொண்டாராம் ஜெயஸ்ரீ.

இதுதவிர 2 தெலுங்குப் படங்களிலும், சில விளம்பரப் படங்களிலும் நடிக்கும் வாய்ப்பும் ஜெயஸ்ரீயைத் தேடி வந்துள்ளதாம்.

ஜெயஸ்ரீக்கு ஜெயம் கிடைக்கட்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X