ஒரு கவர்ச்சி-மூன்று புயல்!

மாளவிகா கல்யாணத்திற்கு முன்பு ஒத்துக் கொண்டு நடித்துக் கொடுத்த படம் மாளவிகா. கல்யாணம் செய்து கொண்ட பின்னர் மீண்டும் வந்து சில சீன்களை நடித்துக் கொடுத்தாராம் மாளு.
அதேபோல ஜேஜே படத்தில் அமோஹா என்ற பெயரில் அறிமுகமாகி, பின்னர் இந்திக்கு நிஷா கோத்தாரி என்ற ஒரிஜினல் பெயருக்கு ஏற்றுமதியாகி இப்போது மீண்டும் அதே நிஷா என்ற பெயரில் திரும்பியுள்ள அமோஹாவும் வித்தியாசமான கேரக்டரில் இப்படத்தில் நடித்துள்ளார்.
கவர்ச்சி பிளஸ் வில்லத்தனம் நிறைந்த வித்தியாசமான கேரக்டரில் வருகிறாராம் நிஷா.
அப்புறம் சமிக்ஷாவும் படத்தில் இருக்கிறார். மூன்று பேருக்கும் நடிப்போடு, நன்கு கவர்ச்சி காட்டவும் சிறப்பான வாய்ப்பாம்.
மூன்று கவர்ச்சிப் புயல்களின் சங்கமமாக இப்படம் இருக்கும் என படத்தின் இயக்குநர் வீராவே அத்தாட்சி கொடுக்கிறார்.
தமிழ் தவிர தெலுங்கிலும் இப்படத்தை உருவாக்கியுள்ளனர். இன்றைய இளம் ரசிகர்களுக்கு இந்த கார்த்திகை, மார்கழி மாத குளிரைக் கொடுக்கும் என்று உத்தரவாதமும் தருகிறார் வீரா.


Click it and Unblock the Notifications











