கஸ்தூரி 'கதிர்வேல்'!

தமிழ் சினி்மாவின் முன்னாள் முன்னணி நாயகி கஸ்தூரி. பல படங்களில் நடித்துள்ள அவர் இடையில் திடீரென காணாமல் போய் விட்டார்.
அமெரிக்கா போய் விட்ட கஸ்தூரி பின்னர் சென்னைக்குத் திரும்பினார். இருந்தாலும் மீண்டும் நடிக்க வராமல் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.
தற்போது அந்த வேலையிலிருந்து விலகி விட்டாராம் கஸ்தூரி. மறுபடியும் நடிக்க முடிவு செய்த கஸ்தூரி கோலிவுட்டில் தனது புதிய ஆல்பத்துடன் களம் இறங்கினார். இதில் அவருக்கு கதிர்வேல் என்ற படத்தில் ஐட்டம் பாட்டுக்கு டான்ஸ் ஆடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ரீ என்ட்ரியின் முதல் படத்திலேயே குத்தாட்டமா என முதலில் யோசித்தாராம் கஸ்தூரி. இருப்பினும் ஆட்டத்தி்ல ஆரம்பித்து அப்படியே நடிப்புக்கு மாறி விடலாம் என்ற எண்ணத்தில் குத்துப்பாட்டுக்கு ஒத்துக் கொண்டாராம்.
தற்போது டிவி ஒன்றில் காம்பியராகவும் கலக்கிக் கொண்டிருக்கும் கஸ்தூரி, தனக்கென்று ஒரு இடம் கோலிவுட்டில் இல்லாமலா போய் விடும் என்ற நம்பிக்கையுடன் உள்ளார்.


Click it and Unblock the Notifications











