twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஐபிஎல் பிராண்ட் அம்பாஸிடர்: விலகினார் கத்ரீனா கைப்!

    By Shankar
    |

    Katrina Kaif
    ஐபிஎல்லின் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பிராண்ட் அம்பாஸிடர் பதவியிலிருந்து விலகிக் கொண்டார் பிரபல நடிகை கத்ரீனா கைப்.

    இடைவிடாத படப்பிடிப்பு காரணமாக தன்னால் ஐபிஎல் -4 சுற்றுப் பயணத்தில் பங்கெடுத்துக் கொள்ள முடியவில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    ஐபிஎல்லின் ஆரம்ப கட்டத்திலிருந்தே விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான பெங்களூர் அணியின் பிராண்ட் அம்பாஸிடராக இருந்து வருகிறார் கத்ரீனா. கடந்த ஆண்டு இவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டும் அவர் விளம்பரத் தூதுவராக இருந்திருக்க வேண்டும்.

    ஆனால் யாஷ் சோப்ராவின் 'மேரே பிரதர் கி துல்ஹன்' எனும் புதிய படத்தில் அவர் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளதால், இந்த விளம்பர தூதர் பணியை மேற்கொள்ள முடியவில்லையாம். எனவே இந்த விளம்பர தூதர் பணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

    "எந்த வேலையாக இருந்தாலும் 100 சதவீத ஈடுபாட்டோடு செய்ய வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால் படப்பிடிப்பு, ஐபிஎல் என இரண்டையும் குழப்பிக் கொள்ள விரும்பவில்லை. ஐபிஎல், சினிமா இரண்டுமே முக்கியம். இரண்டுமே சிறப்பாக வரவேண்டும். எனவேதான் எனது விளம்பரத் தூதர் பணியை இன்னும் சிறப்பாக வேறு யாராவது செய்யட்டும் என விலகியுள்ளேன்," என்கிறார் கத்ரீனா.

    புரொபஷனல்!

    English summary
    Actress Katrina Kaif has stepped down as the brand ambassador of Indian Premier League team Royal Challengers Bangalore because she feels she will not be able to do justice to her responsibilities towards the team due to the IPL-4 matches clashing with her shooting schedule. The Banglaore IPL team had extended her appointment as the brand ambassador for seasons three and four, but she is unable to continue as she would be shooting for Yash Raj Film’s Mere Brother Ki Dulhan during IPL-4 beginning April 8.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X