பாலகிருஷ்ணாவுக்கு 60 நாட்கள்... லட்சுமி ராய் தாராளம்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என் தென் மாநில மொழிகளில் முன்னணி நடிகையான லட்சுமி ராய், இப்போது தமிழில் அஜீத்துக்கு ஜோடியாக மங்காத்தாவில் நடித்து வருகிறார்.
ஆனால் இதில் த்ரிஷாவும் நடிப்பதால், வழக்கம் போல இரண்டாம் நாயகியாக நடிக்க வேண்டிய சூழல் லட்சுமி ராய்க்கு.
இப்போது தனி ஹீரோயினாகவே கலக்க அவருக்கு ஒரு வாய்ப்பு வந்துள்ளது. தெலுங்கில் பாலகி்ருஷ்ணா மூன்று வேடங்களில் நடிக்கும் புதிய படத்தில் லட்சுமி ராய் தனி நாயகியாக அறிமுகமாக உள்ளார். முரளி பரிச்சூர் இயக்கும் இந்தப் படம் விரைவில் தொடங்கிவிருக்கிறது.
இந்தப் படத்துக்காக 60 நாள்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் லட்சுமி ராய். 'தெலுங்குப் படம் ஒன்றிற்கு நான் கொடுத்த அதிகபட்ச கால்ஷீட் இதுவே,' என்கிறார் லட்சுமி ராய்.
Comments


Click it and Unblock the Notifications