குட் பை சொன்ன மாளவிகா!

By Staff

Malavika
மூன்று மாத கர்ப்பிணியான மாளவிகா, நடிப்புக்கு தற்காலிகமாக முழுக்கு போட்டுவிட்டு பெங்களூர் போய்விட்டார்.

ஒரு காலத்தில் கதாநாயகியாக அதுவும் அஜீத்துடன் அறிமுகமானவர் மாளவிகா. ஆனால் தமிழில் போதிய ஆதரவில்லாததால் ஆந்திரா, கர்நாடகா என் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு மீண்டும் தமிழுக்கே வந்தார், எதற்கும் தயார் என்ற அறிவிப்போடு.

உடனே 'இந்தா பிடி' என குத்தாட்ட வாய்ப்பை வாரி வழங்கினார்கள் தமிழ் படைப்பாளிகள். அதுவும் 'வாளமீனுக்கும்....' பாட்டுக்குப் பிறகு, இந்த விலாங்கு மீனுக்கு ஏக கிராக்கி. எல்லா தென் மாநில மொழிப் படங்களிலும் ரவுண்டு கட்டி குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்த தருணத்தில், சுமேஷ் என்ற தொழிலதிபருடன் காதல் ஏற்பட்டது. போன வருடம் அந்தக் காதல் வெற்றிகரமாக கல்யாணத்தில் முடிந்தது.

ஆனால் திருமணத்துக்குப் பிறகும் வெற்றிகரமாக தன் கலைச் சேவையைத் தொடர்ந்தார் மாளவிகா. சொல்லப்போனால் திருமணத்துக்குப் பிறகுதான் விஜய்யுடன் குருவி, ராஜேஷ்வரின் இந்திரவிழா என அவருக்குப் பெரிய வாய்ப்புகள் வந்தன.

இந்தப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த போதே, திருமண வாழ்க்கையின் அடுத்த கட்டமான தாய்மைக்கு வந்துவிட்டார் மாளவிகா. இப்போது அவர் 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

குழந்தை பிறக்கும் வரை ரெஸ்ட் எடுப்பதே நல்லது என டாக்டர்கள் சொல்லிவிட்டதால் அரை மனதோடு தற்காலிக விடுப்பில் போகிறார் அம்மணி.

நேற்று குருவி படத்துக்கான குத்துப் பாடல், டண்டனக்கா டர்னா... (அட... பாட்டு வரியே இதாங்க...) கடைசி ஷெட்யூலில் ஆடி முடித்த கையோடு இதை அனைவரிடமும் சொல்லிவிட்டு மாலை விமானத்தில் சொந்த ஊரான பெங்களூர் கிளம்பிவிட்டார் மாளவிகா.

குழந்தைப் பெத்துகிட்ட பிறகு மீண்டும் வருவேன்... விட்ட இடத்திலிருந்து தொடர்வேன். அதுவரைக்கும் உங்க மாளுவை மறந்துடாதீங்க...என அவர் செட்டில் உருகியதை சொல்லிச் சொல்லி மாய்கிறாராம் இந்தப் படத்தில் அவரோடு சேர்ந்து குத்தாட்டம் போட்ட விவேக்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X