பாலிவுட்டுக்குப் பாய மம்தா ரெடி!

சமீபத்தில் பிரத்யேகமாக ஒரு போட்டோ ஷூட்டை நடத்தி, பாலிவுட்டுக்கு ஆல்பம் அனுப்பி வைத்திருந்தார் மம்தா. அதைப் பார்த்த இயக்குநர் இம்தியாஸ் அலி, இம்ப்ரஸ் ஆகிப் போகவே, இப்போது இம்தியாஸின் அடுத்த படத்தில் மம்தா நடிப்பார் என்று பேசப்படுகிறது.
ஜப் வி மெட், லவ் ஆஜ்கல் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர்தான் இம்தியாஸ் அலி. அடுத்து ரன்பீர் கபூரை வைத்து காதல் படம் ஒன்றை இயக்கப் போகிறார். அந்தப் படத்தில்தான் மம்தா நடிப்பார் எனத் தெரிகிறது.
சமீபத்தில் மலையாலத்தில் நடிகர் சத்யராஜ், திலீப் ஆகியோர் நடிக்க இயக்குநர் கமல் டைரக்ஷனில் உருவாகும் புதிய படத்தில் புக் ஆகியிருந்தார் மம்தா. ஆனால் படப்பிடிப்புக்கு அவர் வரவில்லை. கடும் காய்ச்சலாக இருக்கிறது என்று காரணம் கூறியிருந்தார்.
ஆனால் உண்மையில், தென்னக சினிமாவுக்கே குட்பை போடப் போகிறார் மம்தா, அதனால்தான் நாசூக்காக கமல் படத்தில் நடிப்பதை அவர் தவிர்த்து வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டுக்கு மம்தா என்டர் ஆவது உண்மையானால் சமீபகாலத்தில் பாலிவுட்டுக்குப் போன ஆசின், திரிஷா ஆகியோரது வரிசையில் மம்தாவும் சேருவார்.


Click it and Unblock the Notifications











