சூடு பிடிக்கும் மீரா!

மலையாளத்தில், நல்ல படம், நல்ல கதை, யார் ஹீரோயின் என்ற பேச்சு வந்தால் முதல் ஆளாக கண்களுக்குத் தெரிபவர் மீரா ஜாஸ்மினாகத்தான் இருப்பார். அந்த அளவுக்கு மலையாள திரையாளர்களின் ஏகோபித்த தேர்வாக இன்றும் திகழ்ந்து வருகிறார் மீரா ஜாஸ்மின்.
தமிழ் மற்றும் மலையாளத்தில் அவரை மையமாக வைத்து ஏகப்பட்ட சச்சரவுகள், வதந்திகள், விமர்சனங்கள், குழப்பங்கள் கும்மாளமிட்டபோதிலும் கூட இப்போது அவரது கையில் 3 முத்தான மலையாளப் படங்கள் இருக்கிறதாம்.
பெரிய இயக்குநர்களான கமல், ஷாஜி கருண், ஜோஷி ஆகியோரது படங்களில் நடிக்கப் போகிறார் மீரா ஜாஸ்மின். இதில் கமல் இயக்கும் படத்தில் அவருக்கு ஜோடி போடப் போவது நரேன்.
நரேனும், மீராவும் ஜோடி சேருவது இது மூன்றாவது முறையாகும். இப்படத்தின் ஷூட்டிங் மார்ச் முதல் வாரம் தொடங்குகிறது.
அதேபோல ஷாஜி கருண் இயக்கும் குட்டி ஷ்ரங்கு என்ற படத்தில் மம்முட்டியுடன் ஜோடி போடுகிறார் மீரா. இப்படம் ஏப்ரலில் தொடங்கும் எனத் தெரிகிறது.
3வது வாய்ப்பு திலீப்புடன் கிடைத்துள்ளது. ஏற்கனவே இருவரும் கல்கத்தா நியூஸ் என்ற படத்தில் நடித்துள்ளனர். அந்தப் படம் ஷூட்டிங்கில் இருந்தபோதுதான் மீராவுக்கும், மாண்டலின் ராஜேஷுக்கும் கல்யாணம் என செய்திகள் வந்தது நினைவிருக்கலாம்.
இப்படி மலையாளத்தில் மளமளவென நடிக்கப் போகும் மீராவின் தமிழ் திரையுலக வாழ்க்கைதான் பெரும் குழப்பமாகவும், கோளாறாகவும் உள்ளது. இப்போதைக்கு அவரது கையில் ஒரு தமிழ்ப் படமும் இல்லை.
பரத்துடன் நடித்த நேபாளி வரப் போகிறது. ஜீவனுடன் பயணிகள் கவனத்திற்குப் படத்தில் மீரா நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் விலகிக் கொண்டதால் ('அவர்' சொல்லியிருப்பாரோ?) பிரியா மணி, ஜீவனுடன் ஜோடி போடுகிறாராம்.
அனேகமாக இனிமேல் தமிழில் அவ்வளவாக மீரா நடிக்க மாட்டார் என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











