கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்! - நக்மா

பிரபு தேவா, சரத்குமார், முன்னாள் கேப்டன் கங்குலி, ஒரு போஜ்புரி நடிகர், இந்தி நடிகர் என நிறைய பேருடன் கிசுகிசுக்கப்பட்டவர் நக்மா. இவர்களுடன் திருமணம் நடந்ததாகக் கூட பல்வேறு சூழல்களில் செய்திகள் வந்தன.
ஆனால் அவரோ அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு விதவிதமான அவதாரங்களை எடுத்து வந்தார். சில காலம் போஜ்புரி படங்களில் நடித்தவர், பின்னர் கிறிஸ்தவ மத போதகராக காட்சி தந்தார்.
பின்னர் காஙிகிரஸ் கட்சியில் சேர்ந்து, பாராளுமன்றத் தேர்தலில் நிற்க டிக்கெட் கேட்டு பரபரப்பு கிளப்பினார்.
அந்த முயற்சி தோற்றதால் தேசிய விருதுக் கமிட்டியில் இடம்பெற்றார். இப்போது மீண்டும் படங்களில் நடிக்க முயற்சிக்கிறார்.
இந்நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக நக்மாவே அறிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், 'கங்குலி, மனோஜ் என பலருடனும் நான் பழகியது உண்மைதான். ஆனால் அதெல்லாம் என் தொழில் நிமித்தமானது ('Purely business purpose') ஆனால் மீடியாவில் தவறாக எழுதி விட்டார்கள். இப்போதுதான் முதல் முறையாக திருமணம் செய்து கொள்ளத் தயாராகி வருகிறேன். இந்த ஆண்டுக்குள் கல்யாணம் செய்து கொள்ளலாம் என நினைக்கிறேன். நானே விரைவில் இதுபற்றி அறிவிப்பேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











