'சூப்பர் கிங்ஸ்'-கழற்றிவிடப்பட்ட நயனதாரா!

By Staff

Nayanatara with Vijay
ஐபிஎல்லின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர தூதர் பொறுப்பிலிருந்து நயனதாரா கழற்றிவிடப்பட்டுவிட்டார்.

இந்த அணி நடிகர் விஜய், நயனதாரா ஆகியோரை தங்களது தூதுவர்களாக நியமித்தது. இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விளம்பரப்படுத்துவர் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக விஜய்க்கு சில கோடிகளும் நயனதாராவுக்கு ரூ. 40 லட்சமும் தரப்பட்டதாகத் தெரிகிறது.

இரு வாரங்களுக்கு முன் சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர்கள் அறிமுக நிகழ்ச்சி-விருந்து நடந்தது. அதில் நயன்தாரா பங்கேற்றார். ஆனால், அதன் பிறகு இந்த அணி தொடர்பான எந்த விஷயத்துக்கும் நயனதாரா வரவில்லை.

சென்னையில் நடந்த போட்டியின்போது விஜய் மட்டுமே மைதானத்துக்கு வந்தார். நயனதாரா எஸ்கேப் ஆகிவிட்டார். அப்போது ஹைதராபாத்தில் நடக்கும் குசேலன் படப்பிடிப்பில் இருந்தார்.

இந் நிலையில் அங்கு திடீரென மயக்கம் போட்டு விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

சென்னை மேட்சுக்கு அவரை வர வைக்க கிரிக்கெட் அணியின் பொறுப்பாளர்கள் நயனதாராவுடன் பேசினர். ஆனாலும் அவர் மைதானத்துக்கு வரவில்லை.

இதையடுத்து நயன்தாரா மீது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது சென்னை சூப்பர்கிங்ஸ்.

அவரை அணியின் தூதுவர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்ட சூப்பர் கிங்ஸ், அவருக்கு ஒப்பந்தத்தை மீறி விட்டதாக நோட்டீசும் அனுப்பியுள்ளது.

மேலும் ரூ.40 லட்சத்தை திருப்பித் தருமாறும் உத்தரவிட்டுள்ளனர்.

குசேலன் படப்பிடிப்பில் மயங்கி விழுந்த நயனதாரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு அடுத்த 2 மணி நேரத்தில் மீண்டும் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்துள்ளார்.

சூட்டிங்குக்கு மட்டும் ஓடிப் போன அவர் சூப்பர் கிங்ஸ் கமிட்மெண்டை மட்டும் மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டது தான் அந்த அணி நிர்வாகத்தினரை எரிச்சலாக்கிவிட்டதாம்.

அடுத்ததாக அணியை பிரபலப்படுத்த எடுக்கப்படவுள்ள விளம்பரப் படத்தில் நடிக்கவுள்ளது விஜய்யும் டோணியும் மட்டுமே. இதிலிருந்தும் நயனதாரவை கழற்றிவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X