சேர்ந்து ஜிம் போகும் ரன்பீர்-காத்ரீனா

சல்மான் கானின் பிடியிலிருந்து காத்ரீனா கைப் படிப்படியாக நழுவி வருவதாக கூறப்படுவதே பாலிவுட்டின் புது கிசுகிசு. சல்மானின் நிழலை விட்டு விலக விரும்புகிறார் காத்ரீனா, ரன்பீர் கபூர் மீது காதல் கொண்டுள்ளார் என்றும் செய்திகள் கூறுகின்றன.
போபாலில் ராஜ்நீதி படத்துக்காக முகாமிட்டுள்ள காத்ரீனா, சமீபத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து ரன்பீரை கட்டி அணைத்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பிரகாஷ் ஜாவின் இயக்கத்தில் உருவாகி வரும் ராஜ்நீதி படத்தில் காத்ரீனா, ரன்பீர் தவிர அர்ஜூன் ராம்பாலும் இருக்கிறார்.
படப்பிடிப்பு நேரம் போக மாலை நேரங்களில் இந்த மூவரும் சேர்ந்து உடற்பயிற்சி செய்கின்றனராம். மூன்று பேருமே ஒரு பிசிக்கல் டிரெய்னரை வைத்துள்ளதால், சேர்ந்தே மூன்று பேரும் ஜிம்முக்கு சென்று வருகிறார்களாம்.
மூன்று பேரும் ஒரே இடத்தில் உடற்பயிற்சி செய்தாலும் கூட ரன்பீரும், காத்ரீனாவும் மட்டும் நீண்ட நேரம் ஜிம்மில் இருப்பார்களாம். அர்ஜூன் சுருக்கமாக முடித்துக் கொண்டு போய் விடுவாராம்.
இதுவும் இப்போது பாலிவுட்டில் பரபரப்பான கிசுகிசுவாகி விட்டது.


Click it and Unblock the Notifications











