அசினுக்காக தீபிகாவை நீக்கிய சல்மான்கான்!

சல்மான் கானின் அடுத்த பட நாயகியாக அசின் ஒப்பந்தமாகியுள்ளாராம்.
கஜினி ரீமேக்கில் நடித்து பாலிவுட்டையே அதிரவைக்குமளவு உயரத்துக்குப் போனவர் அசின். ஆனால் அதற்கடுத்து அவர் நடித்த லண்டன் ட்ரீம்ஸ் படம் தோல்வியடைந்ததால், வேறு வாய்ப்புகள் பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். விஜய்யுடன் பாடிகார்டு ரீமேக்கில் நடிக்க ரூ 2 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த நிலையில்தான் சல்மான்கான் நடிக்கும் புதுப்படம் ஆரம்பமானது. இதில் சல்மானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் ஒப்பந்தமாகியிருந்தார். டி சீரிஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை எழுத்தாளர் அனீஸ் பாஸ்மி இயக்குகிறார்.
படப்பிடிப்பு துவங்கும் முன் திடீரென்று தயாரிப்பாளரையும் இயக்குநரையும் அழைத்த சல்மான், தனக்கு ஜோடியாக அசின் நடிக்கட்டும் என்று கூறினாராம்.
இதைத் தொடர்ந்து தீபிகா நீக்கப்பட்டுள்ளதாக பாலிவுட் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே சல்மான்கானும் அசினும் நெருக்கமாக பழகுவதாகக் கூறப்பட்டு வந்தது. இப்போது இந்த பட வாய்ப்பால் இன்னும் பலவாறு செய்திகள் வரத் துவங்கியுள்ளன.


Click it and Unblock the Notifications











