ஷகீலாவின் ஆடலுடன், பாடலும்!

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்களே பார்த்து மிரண்டு போகும் அளவுக்கு ஒரு காலத்தில் மலையாள பலான படங்களில் பட்டையைக் கிளப்பியவர் ஷகீலா. காலப் போக்கில் அவர் மீதான கிரேஸ் குறைந்து போய் விட்டது. இப்போது சுத்தமாக பலான படங்களில் நடிப்பதை விட்டு விட்டார் ஷகீலா. குணச்சித்திரம், காமெடி என டிராக் மாறி விட்டார்.
இந்த நிலையில் தற்போது புது அவதாரம் எடுத்துள்ளார் ஷகீலா. சண்முகிபுரம் என்ற படத்தில் ஒரு பாடலுக்குப் பாடியுள்ளார் ஷகீலா. சும்மா சொல்லக் கூடாது, அவரது கவர்ச்சியைப் போலவே, குரலும் படு கலக்கலாக உள்ளதாம். பாடியதோடு நில்லாமல் அந்தப் பாடலுக்கு ஆடவும் செய்துள்ளாராம் ஷகீலா.
சத்ய சாய் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை என்ஆர்என் செழியன் இயக்கியுள்ளார்.
மனோஜ் என்பவர் நாயகனாக நடித்துள்ளார் படத்திற்கு ஆந்த்ரா நி்வாஸ் ஹீரோயின். 2வது நாயகியாக நடித்திருப்பவர் ஷகீலா.
தஷி இசையமைத்துள்ளார். ஷகீலா பாடியுள்ள பாடலில், சலோனி, அம்ரிதா ஆகிய பாடகிகளும் இணைந்து குரல் கொடுத்துள்ளனர். பாடலை எழுதியிருப்பவர் விஜய் கிருஷ்ணா.
படத்தில் காமெடி டிராக்கிலும் தூள் கிளப்பியுள்ளாராம் ஷகீலா. படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கி, சென்னை, ஹைதராபாத்தில் வைத்து படமாக்கப்படவுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











