ரூ.25 லட்சம்: மீரா ஜாஸ்மின் மீது புகார்!

இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் அனந்தபுரத்து வீடு. நாகா இயக்கும் இப்படத்தில் நந்தா ஹீரோவாக நடிக்கிறார். அவரது ஜோடியாக மீரா ஜாஸ்மின் முதலில் ஒப்பந்தமானார்.
சில நாட்கள் ஷூட்டிங் நடைபெற்ற நிலையில் மீரா ஜாஸ்மின் திடீரென நீக்கப்பட்டார்.
தினமும் மீராஜாஸ்மின் லேட்டாக வந்து கலந்துகொண்டதால் படப்பிடிப்பு ஒழுங்காக நடக்கவில்லை என்றும் இதையடுத்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, படத்திலிருந்து மீரா ஜாஸ்மின் விலகியதாகவும் கூறப்படுகிறது. அவருக்குப் பதிலாக சாயாசிங் ஒப்பந்தம் செய்யப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆனந்தபுரத்து வீடு படத்தின் தயாரிப்பு நிர்வாகி விமல், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் மீராஜாஸ்மின் மீது புகார் கொடுத்துள்ளார். அதில், மீரா ஜாஸ்மினால் தங்களுக்கு ரூ.25 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும் இந்த்த் தொகையை மீரா ஜாஸ்மின் உடனடியாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து மீரா ஜாஸ்மினை அழைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளது தயாரிப்பாளர் சங்கம்.


Click it and Unblock the Notifications











