வாடா...சுந்தர்.சி-ஷெரில்

By Staff

Sheryl Pinto
விஜயகாந்தின் ஆஸ்தான நாயகி என்ற பட்டத்திலிருந்து தப்பிக்க விரும்பிய ஷெரில் பிண்டோ அடுத்து ஒப்பந்தமாகியிருக்கும் படம் வாடா (ரொம்ப மரியாதையான தலைப்பு)

இந்தப் படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் பாலிவுட்டின் கீதா பஸ்ரா. ஆனால் கதையைக் கேட்டுவிட்டுப் போன கீதா, பின்னர் தமிழ்நாட்டுப் பக்கம் எட்டியே பார்க்கவில்லையாம். அதன்பிறகுதான் கேப்டனின் நாயகியை அவரது அனுமதியோடு பிடித்துப் போட்டிருக்கிறார்கள்.

முதல் படத்தில் கனடா நாட்டுப் போலீஸ் வேடத்தில் வந்து டொரண்டோ தெருக்களில் கேப்டனுடன் குத்தாட்டம் போட்ட ஷெரிலுக்கு இந்தப்படத்தின் கதை ரொம்பவே பிடித்துப் போய்விட்டதாம்.

வாடாவில் ஒரு விசேஷம்... அதில் இடம் பெறவிருக்கும் ரீமிக்ஸ் பாட்டு ஒன்று. வழக்கமாக இளையராஜாவின் பாடலை ரீமிக்ஸ் பண்ணும் சுந்தர், இந்தப் படத்தில் சிவாஜி கணேசனின் என்னடி ராக்கம்மாவை உல்டா பண்ணச் சொல்லியிருக்கிறாராம்.

இந்தப் படம் குறித்து ஷெரில் கூறுகையில்,

கதை ரொம்ப யூத்புல்லா இருந்தது. இயக்குநர் வெங்கடேஷ் ஆக்ஷன் படங்களில் எக்ஸ்பர்ட். அதனால் அவர் படத்தில் என்னைப் போன்ற நாயகிகளின் பங்கு என்ன என்பதும் புரியும். என் மனம் விரும்பிய மாதிரி இளமையான, நடிக்க வாய்ப்புள்ள காட்சிகள் நிறைய. சுந்தர் படங்களைப் பார்த்திருக்கிறேன். நிச்சயம் வித்தியாசமான ஹீரோ அவர் என்கிறார்.

நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X