ஷ்ரியாவின் அடுத்த டார்கெட்!

By Staff

{image-shreya 250_25072008.jpg tamil.filmibeat.com}இந்திய சூப்பர் ஸ்டார்கள் இருவர். ஒன்று ரஜினி சார், அடுத்தவர் அமிதாப் பச்சன். ஒரு சூப்பர் ஸ்டாருடன் நடித்துவிட்டேன். என் அடுத்த ஆசை மற்றொரு சூப்பர் ஸ்டாரான அமிதாப்ஜியுடன் ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என்பதே, என்கிறார் பாலிவுட்டின் அடுத்த கனவுக் கன்னி பட்டத்துக்குக் காத்திருக்கும் ஷ்ரியா.

சிவாஜிக்குப் பிறகு தமிழில் பெரிய வாய்ப்புகள் தவறிப் போனாலும், பாலிவுட், ஹாலிவுட்டில் வலுவாகக் கால் பதித்திருக்கும் ஷ்ரியா, இப்போது 4 இந்திப் படங்களில் நடித்துவருகிறார்.

தமிழில் கந்தசாமி, ஜக்குபாய் மற்றும் ஒரு பெயரிடப்படாத தனுஷ் படம் மட்டும்தான். ஹாலிவுட்டில் அசோக் அமிர்தராஜின் படத்தில் கதாநாயகி. இந்தப் படத்துக்குப் பிறகு இன்னும் இரு ஹாலிவுட் வாய்ப்புகளுக்கு ஓகே செல்லும் மூடிலிருக்கிறார்.

என்னதான் பெரிய படங்களில் நடித்தாலும், இதுவரை தான் நடிக்கும் படங்களில் மிகவும் பிடித்து சிவாஜிதான் என்கிறார் வெளிப்படையாக.

சிவாஜி என்பது என் படமல்ல. ரஜினி சார் படம். ஆனால் அந்தப் படத்தில் எனக்கான காட்சிகள் பிரமாத அமையவேண்டும் என விரும்பினார் ரஜினி சார். இப்போது எனக்குக் கிடைத்திருக்கிற எல்லா வாய்ப்புகளுக்கும் காரணம் அவரது பெருந்தன்மைதான். அதை எப்போதும் மறக்க மாட்டேன். என்னைப் பொறுத்தவரை இந்தியாவின் சூப்பர் ஸ்டார்கள் இருவர். ஒருவர் ரஜினி சார். இன்னொருவர் அமிதாப்ஜி.

இப்போது என்னுடைய ஆசையெல்லாம் ஒரு படத்திலாவது அமிதாப் பச்சனுடன் நடித்துவிட வேண்டும், அட்லீஸ்ட் ஒரு காட்சியிலாவது தோன்றிவிட வேண்டும் என்பதுதான்.

எனக்குப் பதினோரு வயதாயிருக்கும்போது, குதா கவா படத்தின் படப்பிடிப்புக்காக உதய்பூர் வந்திருந்த அமிதாப்பிடம் ஆட்டேகிராப் வாங்கியிருக்கிறேன். சில மாதங்களுக்கு முன் பாங்காக்கில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் அமிதாப்பிடம் இதைச் சொன்னபோது அவர் வியந்து போனார்.

உங்களுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் சார், என அவரிடம் என் விருப்பத்தைச் சொன்னேன். நிச்சயம் அப்படியொரு வாய்ப்பு வரும் என்றார் அமிதாப்ஜி. ஆவலுடன் காத்திருக்கிறேன், என்கிறார் ஷ்ரியா.

நடக்கட்டும்... நடக்கட்டும்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X