2வது குழந்தை பிறந்ததால் நடிப்புக்கு பை பை...சிம்ரன் முடிவு!

நேருக்கு நேர், வாலி, துள்ளாத மனமும் துள்ளும், பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் என பல வெற்றிப் படங்களின் நாயகி சிம்ரன். நம்பர் ஒன் நாயகியாக இருந்தபோதே தீபக் என்பவரைக் காதலித்து மணந்தார். பின்னர் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறி மும்பையில் தங்கிவிட்டார்.
சில வருடங்களுக்கு முன் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு மீண்டும் நடிக்க வந்தார். ஆனால் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. பின்னர் அக்கா, அண்ணி வேடங்களில் நடித்தார். 2009-ல் அவர் கடைசியாக நடித்த ஐந்தாம் படை படம் ரிலீசானது. அதன் பிறகு சினிமாவில் நடிக்கவில்லை.
கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியில் பெரிய பங்களா வீடு கட்டி குடும்பத்துடன் குடியேறினார். இந்த நிலையில் கடந்த வாரம் அவருக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு பெயர் சூட்டு விழா அடுத்த மாதம் நடக்கிறது.
இதற்கிடையில் நடிப்புக்கு நிரந்தர முழுக்கு போடுவதாக சிம்ரன் அறிவித்துள்ளார். அடுத்து சினிமா தயாரிப்பில் இறங்குகிறார். இதற்காக புது பட நிறுவனம் ஒன்றையும் துவங்குகிறாராம். அவர் தயாரிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஏப்ரலில் துவங்குகிறது.
இந்தப் படத்துக்குப் பிறகு ஒரு சீரியலை இயக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











