அமெரிக்காவில் ஸ்னேகா

குசேலன் படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஸ்னேகா, நடிகை ஸ்னேகாவாகவே தலை காட்டுகிறார். இப்படத்தில் தனது காட்சிகளை நடித்துக் கொடுத்து விட்டாராம். இதையடுத்து தற்போது அமெரிக்கா கிளம்பியுள்ளார். கலிபோர்னியாவில் நடைபெறவுள்ள அச்சமுண்டு அச்சமுண்டு படப்பிடிப்பில் அவர் பங்கேற்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் அமெரிக்காவில் 45 நாட்களுக்கு நடக்கிறது.
அருண் வைத்தியநாதன்தான் இப்படத்தின் இயக்குநர். பிரசன்னாதான் நாயகன். புதிதாக திருமணமாகி மனைவியுடன், அமெரிக்கா செல்லும் சாப்ட்வேர் என்ஜீனியர் சந்திக்கும் பிரச்சினைகள்தான் படத்தின் மையக் கருத்தாகும்.
படப்பிடிப்புக்கு முன்பே ரிகர்சலுக்கு ஏற்பாடு செய்துள்ளார் அருண் வைத்தியநாதன். சமீபகாலத்தில் ஒரு இயக்குநர் இதுபோல செய்வது இதுவே முதல் முறை என்கிறார்கள். ஆனால், இப்படிச் செய்வதன் மூலம் காட்சிகளில் தத்ரூபமாக நடிக்க முடியும் என்பது அருண் வைத்தியநாதனின் வாதம்.
பிரசன்னாவை 15 நாட்களுக்கு முன்பே அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்து விட்டாராம் அருண். இடது கை டிரைவிங் பழக்கம் உள்ளவராக இப்படத்தில் நடிக்கிறார் பிரசன்னா. இதற்காக அங்கு தற்போது இடது கை டிரைவிங் கற்றுக் கொண்டு வருகிறாராம்.
இதற்காகத்தான் 15 நாட்களுக்கு முன்பே பிரசன்னா அமெரிக்காவுக்குப் பேக்கப் ஆகி விட்டாராம். மேலும் அமெரிக்க ஆங்கிலத்தை எப்படிப் பேசுவது என்பதிலும் டிரெய்னிங் எடுத்து வருகிறாராம் பிரசன்னா.
இதேபோன்ற பயிற்சிகள் ஸ்னேகாவுக்கும் தரப்படும். அதன் பின்னர்தான் ஷூட்டிங் பக்காவாக தொடங்குமாம்.
ஹாலிவுட் படம் போல உலகம் முழுவதும் தனது படத்ைதத் திரையிட திட்டமிட்டுள்ளார் அருண். மொத்தம் 600 பிரிண்டுகள் போடப்படவுள்ளதாம். இப்படத்தில் ஹாலிவுட் நடிக்ர ஜான் ஷியா வில்லனாக கலக்கவுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











