ரஜினி-ஸ்னேகா, மம்தா, நயனதாரா!

பி.வாசுவின் இயக்கத்தில் உருவாகும் குசேலன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் வாசு.
முதல் கட்டமாக ரஜினிகாந்த், பசுபதி, நயனதாரா தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன.
படத்தில் சூப்பர் ஸ்டார் வேடத்தில் ரஜினி நடிப்பதால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் பிரமாண்டம் தெரிய வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார் வாசு. மேலும் படத்தில் ரஜினி வரும் காட்சிகள் குறைவு என்பதால், ஒவ்வொரு காட்சியையும் கலக்கலாக எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் படத்தில் ரஜினிக்கு கலக்கலான கனவுப் பாடல் ஒன்று வைக்கப்படுகிறது. இதில் ரஜினி மூன்று நாயகிகளுடன் இணைந்து ஆடிப் பாடுகிறார். இதற்காக மம்தா மோகன்தாஸ், ஸ்னேகா ஆகியோரை புக் செய்துள்ளார் ரஜினி. இன்னொரு நாயகியைத் தேடி வருகின்றனர்.
ஏற்கனவே இதே டைப் பாடல் கே.பாலச்சந்தரின் மனதில் உறுதி வேண்டும் படத்தில் இடம் பெற்று விட்டது.அந்தப் படத்தில் ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் ஆகியோருடன் சுஹாசினி ஆடிப் பாடுவது போல ஒரு பாடல் இடம் பெற்றிருக்கும். அதே டைப்பில்தான் இந்த ரஜினி பாடலை குசேலனில் வைக்கவுள்ளாராம் வாசு.
ரோபாட்- ஐஸ்வர்யாவுக்கு மீண்டும் சி்க்கல்:
இதற்கிடையே, ரோபோட் படத்தில் ஐஸ்வர்யா ராய் தொடர்பாக ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். அதாவது ரஜினி கால்ஷீட் கொடுத்துள்ள நேரத்தில்தான் ஐஸ்வர்யா ராயும் முதலில் கால்ஷீட் கொடுத்திருந்தார். ஆனால் சில இந்திப் படங்களில் நடிக்க அந்த சமயத்தில் ஏற்கனவே கால்ஷீட் கொடுத்து விட்டதால் ரோபோட்டுக்கு கால்ஷீட் இடிக்கிறதாம்.
இதை ஷங்கரிடம் அவர் சொல்லியுள்ளார். என்ன செய்வது என்று யோசித்த ஷங்கர், ஐஸ்வர்யா, ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை தனித் தனியாக ஷூட் செய்து பின்னர் சேர்த்துக் கொள்வது என்ற முடிவுக்கு வந்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications











