எப்படி இருந்த சோனியா அகர்வால்...!

இயக்குனர் செல்வராகவன் உடனான திருமண முறிவுக்கு பின்னர், எந்த ஒரு படமும் கையில் இல்லாமல் டிவி சீரியல் நடிகையாக முடங்கிப் போன சோனியா தற்போது மலையாளப் பக்கம் கரை ஒதுங்கியுள்ளார்.
பயங்கர ஆயுதங்களுடன் அடிதடி செய்யும் ஆக்ரோஷமான சுரேஷ் கோபிக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடிக்கிறார்.
டிஎஸ் சுரேஷ்பாபு இயக்கும் இப்படத்தில், சோனியா அகர்வாலுடன் மற்றொரு கோடம்பாக்கத்து நாயகியும் இருப்பதாக கூறப்படுகிறது.
திரை வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை அனைத்தும் விரக்தியாகிவிட்ட நிலையில் செகண்ட் ஹீரோயின் கேரக்டர் என்றாலும் பரவாயில்லை, ஏதாவது ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்ற ரேஞ்சுக்கு சோனியா இறங்கி வந்து விட்டார் என்றும் கூறுகிறார்கள்.
இதுபோன்ற கேரக்டர்களை செய்வற்காக சமீபத்தில் சில படங்களை ஒப்புக்கொண்டும் இருக்கிறார் சோனியா அகர்வால். விரைவில் இதுபற்றி அறிவிப்பு வரும்.
Comments


Click it and Unblock the Notifications