தமன்னா... தமிழில் ஒண்ணே ஒண்ணு!!
கடந்த ஆண்டு தமிழில் டாப் ஹீரோயினாக இருந்தவர் தமன்னா. அதிகப் படங்களில் நடித்தவரும் இவர்தான். ஆனால் இந்த ஆண்டு... நம்பினால் நம்புங்கள், கைவசம் ஒரேயொரு படம்தான்!
அது கூட ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. வேறு புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவில்லை தமன்னா.
ஏன்... என்னாச்சு?
அம்மணியின் அதிக சம்பள எதிர்ப்பார்ப்புதான் காரணம் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். எந்தப் படமாக இருந்தாலும் 'இரண்டு சி' என்று எடுத்த எடுப்பிலேயே மிரள வைக்கிறாராம் தமன்னா. இப்படி அவர் நழுவவிட்ட வாய்ப்புகள் ஆறேழு இருக்கும் என்கிறார்கள்.
தெலுங்கில் இந்த சம்பளத்துக்கு கொஞ்சம் கூடக் குறைய இருந்தாலும் சட்டென்று ஒப்புக் கொண்டு நடிக்கிறாராம். இதனால், தமிழில் சுத்தமாக இவருக்கு படங்களே இல்லை. தெலுங்கில் கிட்டத்தட்ட 4 படங்கள் நடிக்கிறார். எல்லாமே பக்கா கமர்ஷியல் படங்கள்...
இதுகுறித்து தமன்னாவிடம் கேட்டால், "அதிக சம்பளம் என்று கூறுவது அபாண்டம். கதை பிடித்திருந்தால்தான் நடிக்க ஒப்புக் கொள்வேன். தெலுங்கில் நான் நடிக்கும் அனைத்துப் படங்களும் கமர்ஷியல்தான் என்றாலும், நானும் கலக்கும் அளவு வெயிட்டான ரோல்," என்றார்.


Click it and Unblock the Notifications











