அமெரிக்காவில் 'தமன்னா தாண்டவம்'!

மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் நாவல் 'ஆனந்த தாண்டவம்' எனும் பெயரில், ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் திரைப்படமாகிறது.
இதில் நாயகியாக தமன்னா நடிக்கிறார். புதுமுகம் சித்தார்த் நாயகனாக நடிக்கிறார். இரண்டு பாகங்களாக வெளிவந்த இந்த புகழ் பெற்ற கதையின் முதல் பகுதி தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் நடக்கிறது. மறு பாதி முழுக்க முழுக்க அமெரிக்காவில் நடப்பது போல் எழுதப்பட்டுள்ளது.
முதல் பாதி முழுக்க எழில் கொஞ்சும் தென் மாவட்ட பகுதிகளில் எடுக்கப்பட்டுவிட்டது. இப்போது அடுத்த பாதிப் பட ஷூட்டிங்குக்காக தமன்னா, சித்தார்த் உள்ளிட்ட படப்பிடிப்புக் குழு இயக்குநர் காந்தி கிருஷ்ணா தலைமையில் நேற்று அமெரிக்கா புறப்பட்டது. மொத்தம் 30 நாட்கள் இப்படத்தின் ஷூட்டிங் நடக்கிறது.
ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.


Click it and Unblock the Notifications











