என்னை நினைத்தால் நடிப்புதான் ஞாபகத்திற்கு வர வேண்டும்-மேக்னா
எனது பெயரைச் சொன்னால், நடிப்புதான் ஞாபகத்திற்கு வர வேண்டும் என படு தெளிவாகப் பேசுகிறார் புதுமுக நடிகை மேக்னா.
கிருஷ்ண லீலையில் நடித்து வரும் மேக்னா நடித்து வெளியான முதல் படம் காதல் சொல்ல வந்தேன். முதல் படத்திலேயே நயனதாரா மாதிரியே இருக்கிறாரப்பா என்ற ஆச்சரியப் பார்வையுடன் தமிழ் சினிமாவை கலக்க ஆரம்பித்துள்ளார் மேக்னா.
ஆனால் நயனதாரா ரேஞ்சுக்கு கவர்ச்சி காட்ட மாட்டாராம். அதில் படு தெளிவாக இருக்கிறார் மேக்னா. இவரது தாயாரை தமிழ் சினிமாவுக்கு ரொம்ப நன்றாகத் தெரியும். வைதேகி காத்திருந்தாள் படத்தில் பிளாஷ்பேக்கில் வரும் வைதேகி கேரக்டரில் நடித்திருந்த பரிமளா ஜோசாய்தான் மேக்னாவின் அம்மா. இவரது அப்பா சுந்தரராஜ். இவர் தஞ்சாவூர்க்காரராம். மேக்னாதான் சொன்னார்.
சரி உங்களோட திட்டம் என்ன என்று மேக்னாவிடம் கேட்டால், கவர்ச்சிகரமாக நடிப்பேன். நிச்சயம் அதற்கு மறுப்பு சொல்ல மாட்டேன். ஆனால் எல்லை மீற மாட்டேன். மேக்னா என்றதும் எனது நடிப்புதான் நினைவுக்கு வர வேண்டும். உடம்பு ஞாபகத்திற்கு வரக் கூடாது என்றார் தெளிவாக.
நயனதாரா மாதிரி இருக்கிறீர்கள் என்ற பாராட்டுக்கும் அடக்கமாக பதிலளிக்கிறார். அது பெருமையாக இருக்கிறது, நல்ல விஷயம்தானே. எங்கு போனாலும் நீங்க நயனதாராதானே என்கிறார்கள். பெருமையாக இருக்கிறது. இருந்தாலும் நயனதாரா மாதிரி நான் நடிக்க மாட்டேன். எனது ஸ்டைலில்தான் நடிப்பேன் என்கிறார் மேக்னா.
தமிழுக்கு வந்த வேகத்தில் இப்போது தெலுங்கு, கன்னடம், மலையாளத்திலும் கலக்க ஆரம்பித்துள்ளாராம் மேக்னா.
அப்புறம் இன்னொரு விஷயம், மேக்னாவுக்கு டான்ஸ்னா உயிராம். அதை மையப்படுத்தி வரும் கேரக்டர் என்றால் உடனே கால்ஷீட் தருவாராம்.
ஆனால், நயனதாராவுக்கு டான்ஸர்னாதான் உயிராம்...!


Click it and Unblock the Notifications











