மவுசும், மார்க்கெட்டும் இருக்கும்போதே சம்பாதிச்சுக்கணும் : இலியானா

இடையில் விஜய்க்கு ஜோடியாக வேட்டைக்காரன் படத்திற்காக கடுமையாக முயன்றனர். ஆனாலும் இலியானா வரவில்லை. இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழுக்கு வந்துள்ள இலியானா, விக்ரம் ஜோடியாக நடிக்கிறார். திரைப்படங்களை தவிர்த்து அம்மணி விளம்பர படங்களிலும் கலக்க ஆரம்பித்துள்ளார்.
விளம்பரத்திலும் நம்பர் ஒன் ஆக முயற்சியா என்று கேட்டால்,
திரைப்படங்களில் நடிக்கையில் விளம்பர படங்களில் எல்லாம் நடிக்கக்கூடாது என்று சிலர் சொல்கின்றனர். அதிர்ஷ்டம் தானாக வந்து கதவை தட்டும்போது அதை ஏன் விட்டுவிட வேண்டும்.
திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும்போதே விளம்பர படங்களிலும் நடிப்பதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
சினிமாவில் மவுசு இருக்கும் வரையில் தான் நமக்கு மதிப்பு. மவுசு குறைந்துவிட்டால் நம்மை யாரும் அழைக்க மாட்டார்கள். நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. எனக்கென்று கொள்கைகள் உணடு. நான் தரமான பொருள்களுக்கான விளம்பரத்தில் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறேன்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பதை சரியாக புரிந்து வைத்திருக்கிறார் இலியானா.


Click it and Unblock the Notifications











