பிரச்சனைகளில் இருந்து மீண்டு புது மனுஷியாக வநதுள்ளேன்: மல்லிகா

By Sudha

Mallika Kapoor
வாத்தியார் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மல்லிகா கபூர். அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, புலி வருது, அந்தோணி யார்? உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

மல்லிகாவை நீண்ட நாட்களாக காணவில்லை. எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. ஆள் என்ன ஆனார் என்று விசாரித்த போது மல்லிகா கூறிய காரணம்...

குடும்ப பிரச்சனையால் கடந்த ஒரு வருடமாக நான் திரைப்படங்களில் நடிக்கவே இல்லை. என் உடல் நிலையும் பாதிக்கப்பட்டு இருந்தது.

இப்பொழுது குடும்ப பிரச்னைகளிலிருந்து மீண்டு விட்டேன். பிரச்சனை என்றால் ஒன்றும் பெரியது எல்லாம் இல்லை. எல்லோருக்கும் ஏற்படுவது போன்று தான். அதை பற்றி விவரிக்க விரும்பவில்லை.

நான் நடிக்க ஆரம்பித்த காலத்தில் சரியான வழிகாட்ட ஆள் இல்லாததால் பல தவறான படங்களில் நடித்தேன். எனது முயற்சிகளில் தோல்வியடைந்து துவண்டு போனேன். இப்போது சுதாரித்துக் கொண்டேன். அதனால் புது மல்லிகாவாக வந்துள்ளேன்.

அன்மையில் மாதவனுடன் சேர்ந்து விளம்பர படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படபிடிப்பின் போது மாதவன் எனக்கு சினிமா சம்பந்தமாக அறிவுரை கூறினார். அது மிகவும் உதவியாக உள்ளது.

இப்போது மலையாளத்தில் லேடீஸ் ஒன்லி படத்தில் முகேஷ் ஜோடியாக நடிக்கிறேன். தமிழில் சந்தோஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளேன். இனி வரும் காலத்தில் நீங்கள் என்னை பல நல்ல படங்களில் பார்க்கலாம் என்றார் உற்சாகமாக.

மல்லிகை போல மல்லிகாவின் திரை வாழ்க்கையிலும் மணம் வீசட்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X