புத்தாண்டு ஆட்டம்-மறுக்கும் நடிகைகள்

மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து மும்பையில் உள்ள ஸ்டார் ஹோட்டல்களில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தை கட்டுப்படுத்தியுள்ளனர் ஹோட்டல் நிர்வாகங்கள்.
நள்ளிரவைத் தாண்டி விடிய விடிய வழக்கமாக ஆட்டம், பாட்டம், உற்சாகம் என போய்க் கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த முறை நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்துள்ளனராம்.
அதேசமயம், கவர்ச்சி ஆட்டங்கள் உள்ளிட்டவற்றை இந்த ஆண்டு ரத்து செய்துள்ளனராம்.
ஆனால் சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டல்களில் வழக்கம் போல கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், மும்பை தாக்குதல் சம்பவத்தையும் மனதில் கொண்டு அதீத ஆடம்பரத்தைத் தவிர்க்க திட்டமிட்டுள்ளனராம்.
இந்த நிலையில் வழக்கமாக டிசம்பர் 31ம் தேதி இரவு நடைபெறும் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் முன்னணி நடிகைகள் பலர் நல்ல தொகை வாங்கிக் கொண்டு ஆட முன்வருவார்கள். ஆனால் இந்த முறை ஒருவர் கூட அதில் ஆர்வம் காட்டவில்லையாம்.
கடந்த ஆண்டு ஷ்ரியா, சதா, மேக்னா நாயுடு, சமிக்ஷா, சார்மி, மல்லிகா கபூர் உள்ளிட்டோர் டான்ஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். ஆனால் இந்த ஆண்டு இவர்கள் யாருமே வர விரும்பவில்லையாம்.
ரசிகர்கள் தரப்பிலிருந்து தேவையில்லாத சில்மிஷங்கள் அதிகம் வருவதாலும், மும்பைத் தாக்குதல் பீதி காரணமாகவும் நடிகைகள் ஆட முன்வரவில்லை என்று தெரிகிறது.
இதனால் சில ஹோட்டல்களில் சின்னத்திரையில் பிரபலமான ஸ்டார்களை பிடித்து ஆட வைக்கலாமா என்ற யோசனையில் உள்ளனராம்.
பெரிய திரை நடிகைகளுக்கு இணையான புகழில் இல்லாவிட்டாலும் கூட ஸ்டார் வேல்யூ உள்ள சின்னத் திரை நடிகைகள் இப்போது நிறையப் பேர் இருப்பதால் அவர்களை பிடித்து ஆட வைக்க திட்டமிட்டு வருகின்றனராம்.


Click it and Unblock the Notifications