கமலோடு 100 நாள்-த்ரிஷா புல்லரிப்பு

By Staff

Trisha
இன்னும் 100 நாட்களுக்கு கமல் சாரோடு இருக்கம் போகும் அனுபவத்தை நினைத்தாலே பரவசமாக இருக்கிறது என்கிறார் மர்மயோகி நாயகிகளுள் ஒருவரான த்ரிஷா.

கமல்ஹாசன்எழுதி இயக்கி நடிக்கும் மெகா திரைப்படமான மர்மயோகியில் நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். ஹேமமாலினி, த்ரிஷா, ஸ்ரேயா மற்றும் பத்மப்ரியா (இவர் மட்டும் இன்னும் வெயிட்டிங் லிஸ்ட்டில்!) ஆகிய நால்வர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் த்ரிஷாவிடம் மட்டும் 100 நாட்களுக்கு கால்ஷீட் வாங்கியுள்ளார் கமல்.

இதுகுறித்து த்ரிஷா கூறுகையில், கமல் சாருடன் நடிப்பதை நினைத்தாலே த்ரில்லிங்காக உள்ளது. படம் ஆரம்பித்த பிறகு 100 நாட்கள் அவரோடு இருக்கப் போகிறேன். நிச்சயம் நடிப்பில் புதுப்புது அனுபவங்களை எதிர்பார்க்கிறேன்.

சின்ன வயதிலிருந்து நான் பார்த்து வியந்த கமல் சாருக்கு இப்போது நானே ஜோடி என்பதை நினைக்கும்போது பிரமிப்பாக உள்ளது என கமல் புகழ் பாடினார்.

சரி... படத்தில் உங்கள் ரோல் என்ன?

ஏன்... இந்தப் படத்தில் நான் நடிப்பது பிடிக்கவில்லையா என்றார் சிணுங்கலாக.

அடுத்தவாரம் மூழுவீச்சில் துவங்குகிறது மர்மயோகி படப்பிடிப்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X