ரஜினியின் அடுத்த நாயகி வித்யா பாலன்?

By Chakra

ரஜினியின் அடுத்த படமான ஹராவில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். ஆனால் இன்னும் அதுபற்றி எனக்கு முறையாக தகவல் வரவில்லை, என்றார் வித்யா பாலன்.

வடக்கு, தெற்கு என்ற பேதமில்லாமல், எல்லா நாயகிகளுமே இவருடன் ஒரு முறை நடித்துவிட வேண்டும் என்று துடிப்பது, ரஜினியுடன் மட்டுமே!

அந்த வரிசையில் இப்போது சேர்ந்திருப்பவர் வித்யா பாலன்.

தமிழில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தாலும், இதுவரை அவர் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. விக்ரம் உள்ளிட்ட நடிகர்களுடன் நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் ரஜினியின் சுல்தான் தி வாரியர் படம், ஹரா என்ற பெயர் மாற்றத்தோடு, அவதார் ஸ்டைலில் தயாராகிறது. மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நிஜ ரஜினியுடன், அனிமேஷன் ரஜினியும் தோன்றுவது போல காட்சிகள் மாற்றப்பட்டுள்ளன. இதற்காக ரஜினி 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை இப்போது இயக்குபவர் கே எஸ் ரவிக்குமார்.

படத்தில் முதலில் நாயகியாக விஜயலட்சுமி நடித்திருந்தார். இப்போது, இன்னொரு நாயகியாக வித்யா பாலனும் நடிப்பார் என்று கூறப்பட்டது.

இதுகுறித்து வித்யா பாலன் கூறுகையில், ரஜினி படத்தில் நடிக்க எனக்கும் ஆசைதான். தமிழ் நான் நடிக்கும் முதல் படம் ரஜினியுடன் அமைந்தால், அதைவிட அதிர்ஷ்டம் எதுவுமில்லை. இதைக் கேள்விப்பட்டதிலிருந்து எனது பெற்றோரும், நான் ரஜினியுடன் நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்ப்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இன்னும் எனக்கு முறையான அழைப்பு வரவில்லை.மீடியா செய்திகள்தான்... அழைப்பு வந்தால் அடுத்த நிமிடம் சென்னையில் இருப்பேன்", என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X